பொன் மாலை நிலவே..!

Madhavi Ravichandran

Taal: Common.Languages.Language.ta

Afbeeldingen
taE-book979823136281327 juni 2025EPUB2

Samenvatting

ஷோபனாவின் பெற்றோர் வாகீசன் - ஜெயந்தி தம்பதியர் மிகவும் கண்டிப்பு மிகுந்த பெற்றோர்.

மனதில் பாசம் இருந்தாலும், பிறந்தது இரண்டும் பெண்களாகப் பிறந்ததில், கண்ணியமாக வளர்க்க - வேண்டும், யாரும் ஒரு சொல் பேசக்கூடாது என்பதில் ஸ்திரமாக இருந்தார் வாகீசன்.

அதற்கேற்றாற் போல அளவுக்கதிகமான கண்டிப்பு நிறைந்தவர்.

சிறிது காலம் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இயல்பிலேயே கண்டிப்பும் கறாரும் மிகுந்தவர்.

நேரம், நேர்மை தவறாதவர்.

கோவையில், இந்திரா நகரில் மிகப் பெரிய டிபார்ட் மென்டல் ஸ்டோர்ஸ் வைத்திருந்தார். அரசாங்க பென்ஷனும், கடையின் வருமானமும் கணிசமாக வந்தது.

சிட்டுக் குருவியின் அழகிய கூடு போன்ற கச்சிதமான வீடு.

"அம்மா! ஏம்மா அப்பா எப்பவும் முகத்தை இப்படி 'உம்'னு வச்சிருக்காரு? எங்க கூட கொஞ்சம் சிரிச்சுப் பேசினா குறைஞ்சா போயிடுவாரு" என்று சிறு வயதில் ஷோபனா கோபமாகக் கேட்டதுண்டு.

அதுவும் கூட தந்தை இல்லாத நேரத்தில்தான். நேராக கேட்க முடியாதே!

"ஷ்! ஷோபி! அப்பாவை அப்படி எல்லாம் பேசக் கூடாதும்மா! அப்பா தானே உன்னை நல்ல ஸ்கூல்ல சேர்த்து, நல்ல சூப்பரான ட்ரெஸ் எல்லாம் வாங்கித் தர்றாங்க... ம்?" என்று ஜெயந்தி ஆதரவாகப் பேசினால்,

"போம்மா! எப்பவும் நீ அப்பாவுக்கு தான் சப்போர்ட் பண்றே! என் க்ளாஸ்ல படிக்கற வீணா, ப்ரீத்தி, சந்தோஷி, சவிதா இவங்க டாடி எல்லாம் எவ்வளவு பாசமா இருக்காங்க தெரியுமா? தினம் ஸ்கூல்ல கொண்டு வந்து விடுவாங்க. அப்புறம்... அப்புறமா போகும்போது கன்னத்திலே முத்தம் குடுத்து டாட்டா காமிப்பாங்க, என்கிட்டே கூட நல்லா பேசுவாங்க, ஆனா டாடி ரொம்ப மோசம், சாமி கிட்டே சொல்லி வேற டாடி கேக்கப் போறேன்" என்றதும் பதறியவளாக ஜெயந்தி,

"ஏய் ஷோபி! வாய் மேலே போடப்போறேன், என்ன பேச்சு இதெல்லாம்?" என்று அதட்டவும்,

"பின்னே என்னம்மா? அப்பா எங்களைக் கொஞ்ச மாட்டேங்கறாங்க. முத்தம் குடுத்து டாட்டா காட்ட மாட்டேங்கறாங்க, எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?" என்று கண்கள் விரிய, ஏக்கத்தில் முகம் சுண்டைக் காயாக சுருங்கிப் போய் அரற்றும் மகளை, ஆசையுடன் அப்படியே அள்ளி மடியில் இறுத்திக் கொண்டு, வாத்சல்யத்துடன் நெற்றியில் முத்தமிட்டாள் ஜெயந்தி.

"ம்ஹூம்! அம்மா! நானு..." என்று மூத்தவள் ரம்யா சிணுங்க,

"வாடா செல்லம்..." என்று இருவரையும் மடியில் உட்கார வைப்பாள்.

கணவரின் கண்டிப்பு வருத்தம் அளிக்கத்தான் செய்தது ஜெயந்திக்கு.

'கண்டிப்பு இருக்க வேண்டியதுதான். அளவான கண்டிப்பு வாழ்க்கையை மெருகேற்றி, சீர்படுத்தும் தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் தானே!' அதுவும் ஒரு முறை குழந்தை ஷோபனா பக்கத்து வீட்டில் பூத்த பன்னீர் ரோஜா ஒன்றை ஆசையாகப் பறித்துக் கொண்டு ஓடி வர, வழியிலேயே அவளைப் பார்த்த வாகீசன், 'தரதர வென்று அவளை வீட்டுக்குள் அழைத்து வந்து தன் பெரிய பெல்ட்டில் விளாசித்தள்ள, குறுக்கே பாய்ந்து தடுத்த ஜெயந்திக்கும் அடி விழுந்தது. கண்கள் தெறித்து விடுவது போல, பயத்துடன் ரம்யா சுவரோரமாக ஒண்டி நிற்க,

"திருடினியா? இனிமே திருடுவியா?" என்று கண் மூடித்தனமாக அடிக்க,

"அப்பா! அடிக்காதீங்கப்பா இனிமே எடுக்க மாட்டேன்பா, அய்யோ அம்மா வலிக்குதும்மா, எனக்கு இனிமே பூவே வேணாம்பா." என்று அரற்றியபடி மயங்காத குறையாக ஷோபனா விழப்போக, அவளை அப்படியே தன் மீது பூப்போலத் தாங்கிக் கொண்டாள் ஜெயந்தி.

Productspecificaties

Inhoud

Taal
ta
Uitvoering
E-book
Oorspronkelijke releasedatum
27 juni 2025
Ebook Formaat
EPUB2
Ebook beveiliging
DRM-vrij

Betrokkenen

Lees mogelijkheden

Lees dit ebook op
Android (smartphone en tablet)Kobo e-readerDesktop (Mac en Windows)iOS (smartphone en tablet)Windows (smartphone en tablet)

Toegankelijkheidsinformatie

Toegankelijkheidskenmerken Ebook
Visueel aanpasbaar
Inhoud van Ebook Bevat
Tekst

Informatie over de fabrikant

Fabrikantgegevens
De informatie van de fabrikant is momenteel niet beschikbaar.

Overige kenmerken

Studieboek
Nee

EAN

EAN
9798231362813

Productveiligheid

Verantwoordelijk marktdeelnemer in de EU

Je vindt dit artikel in

Categorieën
Beschikbaarheid
Leverbaar

Reviews

Nog geen reviews

Kies gewenste uitvoering

Kies je uitvoering
Prijsinformatie en bestellenDe prijs van dit product is 3 euro en 49 cent.
Op voorraad
Direct beschikbaar
Verkoop door bol
  • Ebook is direct beschikbaar na aankoop

  • Ebooks lezen is voordelig

  • Wettelijke garantie via bol

  • Dag en nacht klantenservice

  • Veilig betalen

Bekijk retourvoorwaarden

  • Houd er rekening mee dat je downloadartikelen niet kunt annuleren of retourneren. Bij nog niet verschenen producten kun je tot de verschijningsdatum annuleren.

Bekijk de retourvoorwaarden